ஆவுடையார்கோவிலில் சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் சாலை மறியல்

ஆவுடையார்கோவில் கீழவீதியில், திருவண்ணாமலை பகுதியிருந்து வந்த சிலர் ஜுவல்லரி, டெக்ஸ்டைல்ஸ், பர்னிச்சர், மெட்டல் மார்ட் என்கிற பெயரில் கடை நடத்தி அப்பகுதியில் உள்ளவர்களிடம் சீட்டு என்கிற பெயரில் பணம் வசூலித்துள்ளனர். சிறிது காலம் இந்த கடை இயங்கி வந்திருக்கிறது. பிறகு திடீரென கடையை மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால், சீட்டு செலுத்தியவர்களுக்கு எந்த பொருளும் கிடைக்கவில்லை. பணமும் திருப்பி தரப்படவில்லை. பணம் கட்டியவர்கள் பணம் வசூல் செய்தவர்களிடம் கேட்டபோது, நாங்கள் வசூல் செய்த பணத்தை அந்த கடைகாரர்களிடம் கொடுத்து விட்டோம். நாங்கள் ஊழியர்கள் மட்டுமே. எங்களால் எப்படி பணத்தை திருப்பி கொடுக்க முடியும என்று கூறியுள்ளனர். 

இதனால், சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் அந்த கடையின் முன் நேற்று ஒன்று கூடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார், இதுகுறித்து மனு எழுதி கொடுங்கள், விசாரணை செய்கிறாம் என்று கூறியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்ட அவர்கள் மனு எழுதி கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments