அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதிஅறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி

ஏற்கனவே பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை  கவர்னர் உரையுடன் நாளை கூடுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கலைவாணர் அரங்கிலேயே சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் நாளை உரையாற்றுகிறார். 

சட்டப்பேரவை கூட உள்ளதால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் பெற்றவர்கள் மட்டுமே கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதன்படி, எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பெரம்பலூர் திமுக எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது அறந்தாங்கி எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்  ராமச்சந்திரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்

சட்டமன்றப் பேரவைக்  கூட்டம் நாளை  (5.1.22) தொடங்க  உள்ளதையொட்டி மேற்கொண்ட  கொரோனா பரிசோதனையில் எனக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மறுத்துவர்களின் அறிவுரைப் படி லேசான (Mild) அறிகுறி என்பதால்  வீட்டிலேயே என்னை தனிமை படுத்திக் கொண்டுள்ளேன்.   எனவே  அண்மையில் என்னோடு   அருகிலும், தொடர்பிலும் இருந்தவர்கள்  அனைவரும் கொரோனா பரிசோதனை  செய்து கொள்ளுமாறு  அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். 🙏

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments