கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி முக கவசங்களை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்






புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் "தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதனை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் கண்டிப்பாக அணிந்து செல்ல வேண்டும்"என்றார். மேலும் பொதுமக்களுக்கு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு முக கவசங்களை அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாலகுருநாதன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments