கொரோனா மாத்திரை விற்பனைக்கு வந்தது ஐதராபாத் நிறுவனம் அறிமுகம்





கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான சிகிச்சையாக அமெரிக்காவின் மெர்க் ஷார்ப் டோஹ்மே நிறுவனம் மோல்னுபிரவிர் (மோல்புளூ) என்ற மாத்திரையை (கேப்சூல்) உருவாக்கி இருக்கிறது.

இந்த மாத்திரையை இந்தியா மற்றும் 100 குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் வினியோகிக்க ஐதராபாத்தைச் சேர்ந்த அரபிந்தோ பார்மா நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த நிலையில் மோல்னுபிரவிர் (மோல்புளூ)யை இந்த நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் பெரு நகரங்கள், நகரங்களில் இந்த மாத்திரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த மாத்திரைக்கு மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்கனவே அங்கீகாரம் அளித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments