தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தை தடுக்கும் பட்டை கோடுகள் வரைவு
    தொண்டி-கிழக்கு கடற்கரை சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் பட்டை கோடுகள் வரையப்பட்டது.தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அதிகமான போக்குவரத்தாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எஸ்.பி.பட்டினம் முதல் திருப்பாலைக்குடி வரை 17 இடங்களில் விபத்து பகுதியாக போலீசார் அறிவித்தனர். இந்த அறிவிப்பையும் மீறி வாகன ஓட்டுநர்கள் வேகமாக செல்வது, போதையில் டூவீலர்களில் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் இறப்புஅதிகமாக உள்ளது.இதனால் விபத்தை தடுக்கும் வகையில் வெள்ளை நிறத்தில் பட்டை கோடுகள் வரைய பட்டுள்ளது. பட்டை கோடுகள் வரையப்பட்ட இடங்கள் விபத்து பகுதியாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் வேகத்தை கட்டுபடுத்தி செல்லவேண்டும் என்று போலீசார் கூறினர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments