கீழக்கரை நம்ம தெரு நட்பு வாட்ஸ் அப் தளம்(N T N) உதவி வழங்கும் நிகழ்ச்சி…




கீழக்கரை  கிழக்குத்தெரு, நம்ம தெரு நட்பு ( NTN) சார்பாக மறைமுக தர்மம் அளிக்கும் நிகழ்ச்சி 06-01-2022 அன்று மாலை 5 மணியளவில் பட்டாணியப்பா தர்ஹா அருகில் இருக்கும் அபுல்ஹஸன் வீட்டுத்திடலில் நடைபெற்றது.

வாட்ஸ்அப் தளத்தை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பயன்படுத்தாமல் சமூக நோக்கோடு பலர் செயல்படுத்துகின்றனர் அவ்வழியில் கீழக்கரையை சேர்ந்த நம்ம தெரு நட்பு வாட்ஸ்அப் குழுமத்தினர் ஆண்டுதோறும் வறுமையில் வாடும் குடும்பத்தை தேர்வுசெய்து அவர்கள் தொழில் தொடங்கி வாழ்வு சிறக்க கணிசமான தொகையை தந்து உதவுகின்றனர். இந்த வருடமும் 2 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயை இரண்டு குடும்பங்களுக்கு பிரித்து தொழில் துவங்க உதவியுள்ளனர். யாருக்கு உதவுகின்றனர் என்பதை அவர்கள் வெளியிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

நிகழ்ச்சியின் தொடக்கமாக நம்ம தெரு நட்பு உறுப்பினர் முஸவ்வீர் கிராத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து வரவேற்புரை,நம்ம தெரு நட்பு செயல்பாடுகள் குறித்து தளத்தின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது அயூப்கான் விளக்கி கூறினார். மக்கள் நல பாதுகாப்புக்கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் வாழ்த்துரையாற்றினார். அதனை தொடர்ந்து தர்மத்தின் சிறப்பு பற்றி பேராசிரியர் ஆசிப் சிறப்புரை ஆற்றினார்..இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சியில் நம்ம தெரு நட்பு புரவலர்கள் செய்யது பாரூக், முஹம்மது ஜபருல்லாக்கான், பாக்கர், ஹமீது இபுறாகீம், முஸவ்வீர், அஹமது அஸ்லம், பரீது, சம்சுதீன் ஆலிம்,காதர் சுல்தான்,நஸீர் அஹ்மது, முகம்மது, சலீம், ரீஹான்,அபுல் ஹசன்அபு ஹாரித் ஆகியோர் கலந்து கொண்டனர்.




நிகழ்ச்சி ஏற்பாட்டினை நம்ம தெரு நட்பு ஒருங்கிணைப்பாளர்கள் முஹம்மது அயூப்கான், பேராசிரியர் ஆசிப், அஜ்மல் கான் ஆகியோர் செய்து இருந்தனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments