இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினை காரணம் காட்டி விடுதலை செய்ய மறுப்பதைக் கண்டித்துநாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி அதிராம்பட்டிணம் கிளை முன்னெடுக்கும் இருபது ஆண்டுகளுக்கு மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினை காரணம் காட்டி விடுதலை செய்ய மறுப்பதைக் கண்டித்தும் , 161 -வது சட்டப்பிரிவினைப்பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய மறுத்துவரும் ஒன்றிய - மாநில அரசுகளை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மு.ராஜிக் அஹமது தலைமையில் 07.01.2022 அன்று மாலை 5.00 மணி அளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.


இதில்   தேவராசன் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் முன்னிலை வகித்தார்,
  மு.ஜஹபர் சாதிக் நகரச்செயலாளர் , அதிராம்பட்டிணம். 
இடும்பாவனம். கார்த்திக் மற்றும் தஞ்சை கரிகாலன் ஆகியோர் 
கண்டன உரை நிகழ்த்தினர்.

 இன் நிகழ்ச்சியில்  கோபாலப்பட்டிணம் மற்றும் அரசநகரிப்பட்டினம் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர் மேலும் பெருந்திரளான நாம் தமிழர் கட்சியின் உறவுகள் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்..


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments