புதுக்கோட்டை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் ரகுபதி



புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்  பணிகளை சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், பேரையூர் ஊராட்சி, பிலாக் குடிப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, பேரையூரில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம், தூய்மை பாரத இயக்க திட்டத்தின்கீழ் ரூ.5.25லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாய சுகாதார வளாகம், மல்லாங்குடியில் 14&வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.4.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி ஆகிய வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் ரகுபதி தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் அடிப்படை தேவைகளில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதிலும், ஏழை, எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

கொரோனா 3 ஆம் அலை தடுப்பு பணிகளை முதல்வர் முனைப்புடன் மேற்கொண்டு  வருகிறார். கிராமங்களின் வளர்ச்சியே ஒரு நாட்டின் வளர்ச்சி என்பதை கருத்தில் கொண்டு குடிநீர், சாலை, மின்விளக்கு போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவ தில் தமிழக முதல்வர் நல்லாட்சி செய்து வருகிறார். இத்திட்டப்பணிகளை பொதுமக்கள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும் கோட்டூர், பனையப்பட்டி, மேலப்பனையூர் ஆகிய ஊராட்சிகளில் தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளையும் பயனாளிகளுக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.

மேலப்பனையூரில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments