ஆவுடையார்கோவில் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
றந்தாங்கி அருகே அரசு கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

புதுக்கோட்டை மவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகா பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் இயங்கி வருகிறது. இக்கல்லூரியின் 7-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் கண்ணன் ஏற்ப்பாட்டில் கல்லூரி திறந்தவெளி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் தலைமை தாங்கி 550 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இளங்கலையில் 450 பேரும், முதுகலையில் 100 பேரும் என மாணவ, மாணவிகள் வரிசையாக பட்டங்களை பெற்றுச்சென்றனர். இதில் மதிப்பெண் அடிப்படையில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கான நற்பண்புகள் குறித்து உறுதி மொழியேற்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், மாவட்டக்குழு    உறுப்பினர் சரிதா மேகராஜன், கூட்டமைப்பு தலைவர் மணிமொழியன்,

கல்லூரித்துறை தலைவர்கள் திருவாசகம், கணேசன், ராஜேந்திரன், நாராயணசாமி, டேவிட் கலைமணிராஜ், கிளாடிஸ், சிற்றரசு உள்ளிட்ட மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments