ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்





மணமேல்குடி போலீசார் சார்பில், மணமேல்குடி ஒன்றியம் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் கோட்டைப்பட்டினத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அனைத்து ஊராட்சிகளிலும் குற்றங்களை தடுப்பதற்காக கண்காணிப்பு கேமரா அமைப்பது தொடர்பாகவும், தற்போது அரசு விதித்துள்ள கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது சம்பந்தமாகவும் எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம், கோட்டைப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments