மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் கலெக்டர் எச்சரிக்கை
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்காமல் இருப்பது தெரியவருகிறது. எனவே முககவசம் அணிவதை கட்டாயமாக்கும் வகையில் தமிழக அரசால் 12-ந் தேதி அரசாணை பிறப்பித்து. அதன்படி முககவசம் அணியாதவர்களிடம் தண்டனை தொகையாக ரூ.200 வசூலிக்கப்பட்டு வந்ததை உயர்த்தி ரூ.500 வசூலிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் அபராதத்தினை தவிர்த்திடும் வகையிலும், நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும் பொது இடங்களுக்கு செல்லும்பொழுது அவசியம் முககவசம் அணிய வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments