கோபாலப்பட்டிணத்தில் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம்

கோபாலப்பட்டிணத்தில் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் வட்டம், நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள  கோபாலப்பட்டிணத்தில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகின்றன. மேலும் தெருநாய்கள் கூட்டமாக சாலையில் நிற்பதினால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே சாலையில் சென்று வருகின்றனர். 

சில தெரு நாய்கள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழு நிலையையும் உள்ளது.

எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோபாலப்பட்டிணம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோபாலப்பட்டிணத்தில் 4 பேரை வெறி நாய் கடித்தது குறிப்பிடத்தக்கது.
எனவே முன்னெச்சரிக்கையாக  பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் ‌‌‌‌‌என GPM மீடியா சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments