கோபாலபட்டிணம் ஆற்றங்கரை (நீர்நிலை) அருகே குப்பை கிடங்கில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகள்




கோபாலபட்டிணம் ஆற்றங்கரை (நீர்நிலை) அருகே குப்பை கிடங்கில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகள் நடவடிக்கை எடுக்குமா ? தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம்

இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட தலைவர் சேக் தாவூதீன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலபட்டினம் பகுதியில் அள்ளப்படும் குப்பைகளை ஆற்றின் ஓரத்தில் கொட்டி வருகின்றனர்

நீர்நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்ட கூடாது என்று நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவுகள் இருந்தும் சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை

சுற்றுவட்டார பகுதியில் பெய்யும் மழைநீர் இந்த ஆற்றின் வழியே கடலில் கடக்கும் மற்றும் மாலை நேரங்களில் கடல் பெருக்கத்தின் போது கடல்நீர் இந்த ஆற்றில் நிரம்பி இருக்கும்




எனவே குப்பைகளை ஆற்றின் பகுதியில் கொட்டுவதால் குப்பைகள் மற்றும் ஆற்று நீர் கலந்து அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்களை பரப்புகின்றன.

கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் இது போன்ற சுகாதார சீர்கேட்டல் அப்பகுதியில் வாழும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்

அரசு இயந்திரம் தொடர்ந்து அலச்சியபடுத்தினால் மக்கள் போராட்டம் விரைவில் நடைபெறும்

இப்படிக்கு
B.சேக் தாவூதீன்
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
புதுக்கோட்டை(கிழக்கு)மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments