புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.69 கோடியில் கட்டப்பட்டவகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.69 கோடியில் கட்டப்பட்ட 12 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

கீரனூரிலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.69 கோடி மதிப்பில் 12 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோரின் முன்னிலையில் இந்தக் கட்டடங்களை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ்பொய்யாமொழி திறந்து வைத்துப் பேசினாா்.

அப்போது பேசிய அமைச்சா் மகேஷ், மாநிலம் முழுவதும் பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் ஏறத்தாழ 3,030 எண்ணிக்கையில் கண்டறியப்பட்டு, படிப்படியாக அவை அகற்றப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் எம். சின்னதுரை, புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவா் கேஆா்என். போஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments