கரோனா பரவல்: போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்.27-ம் தேதிக்கு மாற்றம்
கரோனா பரவல்: போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்.27-ம் தேதிக்கு மாற்றம்

சென்னை: கரோனா பரவல் காரணமாக ஜனவரி 23ஆம் தேதியன்று நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா சூழலைக் கருத்தில் கொண்டு தேதியை மாற்றி வைக்க வேண்டும் என மாநில அரசுகள், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன.


இதனைத் தொடர்ந்து, ஜனவரி 23ஆம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 27ஆம் தேதி நாடு முழுவதும் குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேதியை மாற்றி வைக்க வேண்டும் எனவும், ஏற்கெனவே கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு இது கூடுதலான பணிச்சுமையை உண்டாக்கும், சொட்டு மருந்து செலுத்த வரும் குழந்தைகளுக்கு கரோனா பரவ வாய்ப்புள்ளதால் தேதியை மாற்றி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சொட்டு மருந்து முகாம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments