தொண்டியில் பரவும் காய்ச்சலால் பொதுமக்கள் அச்சம்




ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர கிராமங்களில் பரவும் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் தேங்கிய தண்ணீரில் உற்பத்தியான கொசுக்களாலும், சுற்றுப்புற சுகாதாரமில்லாததாலும் டைபாய்டு மற்றும் டெங்கு காய்ச்சல்கள் இங்கு எளிதில் பரவுகின்றன.

குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்படும் காய்ச்சலால் மற்றவர்களுக்கும்  தொற்றி பரவுகிறது. பெரும்பாலும் இருமல், காய்ச்சல், தொண்டை  வலி  இருப்பதால் கொரோனாவாக இருக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். 

கொரோனா, டெல்டா வைரஸ் பரவலைத்தொடர்ந்து ஒமைக்கிரான் பரவலால் போதிய விழிப்புணர்வு இல்லாத இந்தப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுகாதாரத்துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் சாக்கடை, தண்ணீர் தேங்கும் இடங்கள், நீர்நிலைகளை ஆய்வு செய்து தண்ணீர் தேங்காமல், சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.  

மேலும் தொற்றுக்கள் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments