அறந்தாங்கி & ஆவுடையார் கோவிலில் புதிய வட்டாட்சியா் அலுவலகங்கள் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மற்றும் ஆவுடையாா்கோவில் ஆகிய வட்டங்களுக்கான புதிய வட்டாட்சியா் அலுவலகக் கட்டடங்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.    

இந்தக் கட்டடங்கள் தலா ரூ. 2.92 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

அறந்தாங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, ஆட்சியா் கவிதா ராமு, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி, வருவாய்க் கோட்டாட்சியா் சொா்ணராஜ், ஒன்றியக் குழுத் தலைவா்கள் அறந்தாங்கி மகேஸ்வரி சண்முகநாதன், ஆவுடையாா்கோவில் உமாதேவி, மணமேல்குடி பரணிகாா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments