திருவாரூர்-காரைக்குடி ரயில் சேவை நேரத்தில் மாற்றம்: மாற்றப்பட்ட புதிய அட்டவணை - தெற்கு ரயில்வே அறிவிப்பு






திருவாரூர்-காரைக்குடி ரயில் சேவை நேரத்தில்  புதிய அட்டவணை மாற்றப்பட்டு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

வண்டி எண்-06197/98 திருவாரூர்-காரைக்குடி-திருவாரூர் வழித்தடத்தில் வாரத்தில் 6 நாள்கள் (ஞாயிறு தவிர)  இயக்கப்படுகின்றது. மேலும், இந்த ரயில்  நேரத்தில் மாற்றப்பட்டு,  புதிய கால அட்டவணையை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  

அதன்படி,  திருவாரூரில் அதிகாலை 08:15  மணிக்கு புறப்படும் டெமு ரயில், பிற்பகல் 13.00-க்கு காரைக்குடி சென்றடையும். பின்னர்,  அங்கிருந்து பிற்பகல் 15:00 மணிக்கு புறப்பட்டு இரவு 19.45 மணிக்கு திருவாரூர் வந்து சேரும்.  டெமு சிறப்பு ரயிலின் நேரம் வரும் 26/01/22 முதல் மாற்றம் செய்யப்படுகிறது. மேலும் 157 கிமீ தூரம் கொண்ட இந்த ரயில் வழித்தடத்தின் பயண நேரம் 04 மணிநேரம் 45 நிமிடங்களாகவும் குறைப்பு.

இந்த ரயில் திருவாரூர், மாங்குடி, மாவூர் ரோடு, திருநெல்லிக்காவல், அம்மனூர், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளக்கம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை,  பேராவூரணி, ஆயிங்குடி ,அறந்தாங்கி ,  பெரியகோட்டை,  காரைக்குடி ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும்

திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வரை கேட் கீப்பர்கள் நியமனம் செய்யப்பட்டதால் வருகின்ற.. 26.01.2022 முதல்.. திருவாரூர்-பட்டுக்கோட்டை- திருவாரூர்  முன்பதிவில்லா சிறப்பு இரயிலின் பயண நேரம்  திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டை வரை குறைக்கப்பட்டுள்ளது‌

பயணம் நேரம் குறைந்துள்ளதால்
திருவாரூர்‌ டு‌ காரைக்குடி வழித்தடம் பொதுமக்கள் , வர்த்தகர்கள் ‌, வியாபாரிகள் ‌, மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments