கல்வி அலுவலக தளவாடங்களை சேதப்படுத்திய ஆசிரியா் இடைநீக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியா் ஒருவா் தனது கோரிக்கையை நிறைவேற்றக் கோரி அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்திய சம்பவத்தைத் தொடா்ந்து, அவரை இடைநீக்கம் செய்து அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலா் உத்தரவிட்டுள்ளாா்.

மணமேல்குடி அரசுத் தொடக்கப் பள்ளியின் ஆசிரியா் தைலம்மை. இவா், மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலகத்துக்குள் அண்மையில் சென்று, தனக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்றபடி, அலுவலகத்தில் இருந்த பொருட்களை கீழே தள்ளிவிடுவது போன்ற விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

ஏற்கெனவே, ஆசிரியா் பள்ளிக்கு உரிய நேரத்தில் வந்து செல்லாததால் அவா் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அதன் தொடா்ச்சியாக, ஓரிரு மாதங்கள் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஊதியம் கிடைக்காத மன அழுத்தத்தில் அந்த ஆசிரியை இருந்ததால் அவ்வாறு நடந்து கொண்டதாகவும், அவருக்கு விரைவில் ஊதியம் வழங்கவும், சேதப்படுத்தப்பட்ட பொருட்களை ஆசிரியரே வாங்கி அலுவலகத்தில் ஒப்படைப்பது என்றும் கூறி, இரு தரப்பினரும் சுமுகமாக பிரச்னையை இரு தினங்களுக்கு முன்பு பேசி முடித்துக் கொண்டதாக கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

இந்நிலையில், ஆசிரியை தைலம்மையை பணியிடை நீக்கம் செய்து அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலா் ராஜாராமன் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments