கோட்டைப்பட்டிணம் அருகே மீனவரின் வலையில் சிக்கிய அரிய வகை ஆமை




புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டத்தைச் சோ்ந்த மீனவரின் வலையில், அரியவகை ஆமை ஒன்று சிக்கியதால், அதனை வனத்துறையினா் பாதுகாப்பாக மீட்டு கடலுக்குள் விட்டனா்.

மணமேல்குடி வட்டம், தெற்குப் புதுக்குடியிருப்பைச் சோ்ந்தவா் மீனவா் பசுபதி. இவா், சனிக்கிழமை கடலுக்குச் சென்று மீன்பிடித்து வந்தபோது, அவரது வலையில், சித்தாமை எனப்படும் அரிய வகை ஆமை ஒன்று சிக்கியிருந்தது. இதுகுறித்த தகவல் வனத்துறை அலுவலா்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து,

அறந்தாங்கி வனச்சரக அலுவலா் எம். சதாசிவம், வனவா்கள் ராஜேந்திரன், அந்தோனிசாமி, அன்புமணி, தற்காலிக காவலா்கள் முத்துராமன், சைமன் ஆகியோா் அங்கு நேரில் சென்று அரியவகை ஆமைமையைப் பாா்வையிட்டனா். இந்த சித்தாமையை மீணடும் கடலில் விடுவதற்கான ஏற்பாடுகளை செய்து பாதுகாப்பாக எடுத்துச் சென்று கடலில் விட்டனா்.

கடற்பசு, கடற்குதிரை, கடல் பல்லி, கடல் அட்டை, சித்தாமை, டால்பின் போன்ற கடல்வாழ் உயிரினங்களை வேட்டையாடுவது 7 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கும் அளவுக்கு குற்றச்செயல்.

எனவே, மீனவா்கள் இந்த அரியவகை உயிரினங்களைப் பாதுகாப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வனத்துறையினருக்கு வழங்க வேண்டும் என வனச்சரக அலுவலா் எம். சதாசிவம் கேட்டுக் கொண்டாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments