இந்திய குடிமக்களுக்கு புருனே நாட்டில் கல்வி உதவித்தொகை
படிப்புகள்: 

டிப்ளமோ, இளநிலை பட்டப்படிப்புகள், முதுநிலை பட்டப்படிப்புகள்.

கல்வி நிறுவனங்கள்: 

புருனே தாருஸ்ஸலாம் பல்கலைக்கழகம் செரி பெகவான் பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி சுல்தான் ஷெரீப் அலி இஸ்லாமிய பல்கலைக்கழகம் புருனே தொழில்நுட்ப பல்கலைக்கழகம் புருனே பாலிடெக்னிக்

தகுதிகள்:

இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமா படிப்புகளில் சேர்க்கை பெற 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

மேலும், படிப்புகள், கல்வித்தகுதிகள் குறித்த விரிவான தகவல்களுக்கு அந்தந்த கல்வி நிறுவனங்களின் இணையதளத்தை பார்க்கலாம்.

உதவித்தொகை விபரம்:

கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம், புருனே சென்றுவர விமானச் செலவு, மாதம் சுமார் ரூ.27,500, உணவு செலவினங்களுக்கு மாதம் சுமார் ரூ.8 ஆயிரம், புத்தகங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ. 33 ஆயிரம் உட்பட பல்வேறு சலுகைகள் இந்த உதவித்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

உரிய ஆவணங்களுடன் http://www.mfa.gov.bn/Pages/bdgs/bdgs2022.aspx எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்தபின் பதிவிறக்கம் செய்து, பிறப்பு சான்றிதழ் நகல், பாஸ்போர்ட் நகல், கல்லூரி / பல்கலைக்கழக சான்றிதழ் நகல், காவல்துறை சரிபார்ப்பு சான்று போன்ற ஆவணங்களுடன் es3.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 பிப்ரவரி 2022
விபரங்களுக்கு: www.education.gov.in

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments