திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் தேர்வான மாணவர்களுக்கு கலெக்டர் கவிதாராமு பரிசு வழங்கினார்
தமிழ் வளர்ச்சி துறை சார்பில், 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், மாநிலம் முழுவதும் 219 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் 9 மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதத்தில் தலைமைச் செயலகத்தில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டன. மற்ற மாணவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் கலெக்டர் மூலம் வழங்க அறிவுறுத்தப்பட்டன. 

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் தேர்வான 3 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும், நூல் பரிசும், அரசாணையும் கலெக்டர் கவிதாராமு நேற்று வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, தமிழ்வளர்ச்சி உதவி இயக்குனர் நாகராசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments