மலேசியாவில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத்தாருங்கள்”-அரியலூர் ஆட்சியரிடம் மனுஅளித்த பெண் 
மலேசியாவில் உயிரிழந்த தனது கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி கண்ணீர் மல்க மனு அளித்தார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மணப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு காந்திமதி என்ற மனைவியும் 2 மகன்கள் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில், தனது சொந்த ஊரில் தச்சு வேலை செய்து வந்த இவருக்கு போதிய வருமானம் கிடைக்காததால் வேறு வழியின்றி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கூலிவேலை செய்ய மலேசியா சென்றுள்ளார்.

இதையடுத்து இன்று காலை ராஜேந்திரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாக காந்திமதிக்கு தகவல் வந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், தனது மூன்று குழந்தைகளுடன் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க மனு அளித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments