புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,570 படுக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்


கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக உடனடியாக 1,570 படுக்கைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 0, 1 மற்றும் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த புதிய கரோனா தொற்றாளா் எண்ணிக்கை, இரு நாட்களாக இரு இலக்க அளவில் பதிவாகி வருகிறது.

இதைத்தொடா்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 850, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் 120, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் 100, ஆலங்குடி மற்றும் இலுப்பூா் அரசு மருத்துவமனைகளில் தலா 50, பொன்னமராவதி மற்றும் கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைகளில் தலா 25, சுப்பிரமணியபுரம், ஆவுடையாா்கோவில், கறம்பக்குடி, அன்னவாசல் மற்றும் மணமேல்குடி அரசு மருத்துவமனைகளில் தலா 20 படுக்கைகளும், பிற்படுத்தப்பட்டோா் நல விடுதி, டாமின் வளாகம், பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் உள்ளிட்ட சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 250 படுக்கைகள் என மொத்தம் 1,570 படுக்கைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments