திருச்சி விமான நிலையத்தில் சரக்கு ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தம்


திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று (9-ந் தேதி) முதல் சரக்கு ஏற்றுதி சேவைகள் தற்காலிகமாக மூடப்படும் என்று விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நிர்வாக காரணங்களால் ஏற்றுமதி சேவைகள் நிலையம் மூடப்படவுள்ளது. மீண்டும் சேவைகள் தொடங்குவதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். 

மேலும் அனைத்து விமான நிறுவனங்கள் ஐ.ஏ.டி.ஏ. முகவர்கள் கன்சோல்கள் விமான நிலைய அலுவலகத்தில் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை திருச்சி விமான நிலையத்தில் சர்வதேச விமான சரக்கு முனையம் ஏற்றுமதிக்கு எந்த சரக்குகளையும் முன்பதிவு செய்ய ஏற்கவேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments