கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் சார்பில் 2 இடங்களில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம்


கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் சார்பில் 2 இடங்களில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெறுகிறது

கொரோனாவின் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதாக கூறும் தமிழ்நாடு அரசின் அறிவிப்புகளை பார்க்கிறோம்.
இந்த கொடிய தொற்றினால் இதுவரையில் நூற்றுக்கணக்காணோர்  மரணித்ததையும் காணும்பொழுது மனம் நோகிறது.ஆகையால் இந்த கொடிய கொரோனா தொற்றினை எதிர்கொள்வதின் அங்கமாக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை உட்கொள்வது மிக முக்கியமாகிறது.

அந்த வகையில் 
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள   கோபாலப்பட்டிணத்தில் 
என்றும் உதவும் கரங்கள்     அறக்கட்டளையின் சார்பாக இரண்டு இடங்களில்  வருகின்ற செவ்வாய்கிழமை 11-01-2022  இரண்டு ரேசன் கடைகளில் காலை 8 மணி முதல் கபசுர குடிநீர் வழங்குவதாக அறிவிக்கப்படுகிறது.எனவே அனைத்து அங்கத்தினரும் பொதுமக்களும் கபசுர குடிநீர் வழங்கும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். இல்லங்களுக்கு வாங்கிச்செல்ல விரும்புவோர் அதற்கான பாத்திரத்தை எடுத்துவருமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

2 இடங்கள்

* கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் அருகில் ரேஷன் கடைகளில் முன்பு

* கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் அருகில் ரேஷன் கடைகளில் முன்பு

இதனை மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

கொரேனா என்னும் இந்தக் கொடிய வைரஸ் நோய் தொற்று வராமல் இருக்க முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி இருந்து கொள்ளுங்கள். 

கடந்த கொரனோ  இரண்டு அலையிலும்
கோபாலப்பட்டிணத்தில் மே மாதத்தில் மூன்று நாட்களுக்கு என்றும் உதவும் கரங்கள் சார்பாக கபசூர குடிநீர் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செயல்பாட்டுக்குழு,
என்றும் உதவும் கரங்கள்
கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை
கோபாலப்பட்டிணம் 
மீமிசல் 
புதுக்கோட்டை மாவட்டம்
81241 50046,70109 92430

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments