ஜனவரி 31-ம் தேதிவரை 10, 11, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை; தேர்வுகள் தள்ளிவைப்பு






சென்னை: கரோனா அதிகரித்து வருவதால் வரும் 31 ஆம் தேதிவரை அனைத்து வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறுவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “ கரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.


இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதனையடுத்து, வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 'தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் இல்லாததால் திருப்புதல் தேர்வு தேதிகள் ஜனவரி 31ம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று 23,989 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 29,15,948. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 6,34,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,47,974 .

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments