8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகைக்கான தேர்வு அறிவிப்பு
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்கும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்திற்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவித் திட்டத்தின் கீழ்,  எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது. இதற்காக வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களை தெரிவு செய்து தேர்வு நடத்தப்படும். மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம். 

மாணவர்களின் பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50  லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்திற்கான தேர்வு (என்எம்எம்எஸ்) வருகிற மார்ச் 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை இன்று, ஜனவரி 12 முதல் ஜனவரி 27ஆம் தேதி வரை http://dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50ஐ,  அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஜனவரி 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கால தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். புறச்சரக பதிவு எண் கொண்ட தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அரசு தேர்வு இயக்குநர் சேதுரமவர்மா தெரிவித்துள்ளார்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments