அம்மாபட்டினம் கிராமத்தில் மக்கள் கிராம சபை கூட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே அம்மாபட்டினத்தில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே அம்மாபட்டினம் கிராமத்தில் 2 ஆரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மக்கள் கிராமசபைக் கூட்டம் நடத்த ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கூட்டத்திற்கு சம்மந்தப்பட்டத் துறை அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கிராமசபைக் கூட்டத்தைப் புறக்கணித்து கலைந்து சென்றனர். 

மேலும் கிராமசபைக் கூட்டம் ரத்தான நாளிலிருந்து ஒரு மாத கால அவகாசத்திற்குள் மீண்டும் கிராமசபைக் கூட்டம் நடத்திட வேண்டும் என்ற நோக்கில், அப்பகுதி மக்கள் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்க்கு அனுமதி கோரி மனு அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லையென கூறப்படுகிறது. 

எனவே தங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட, அப்பகுதி மக்களே சிறப்பு மக்கள் கிராமசபைக் கூட்டத்தை நடத்தினர்.


கூட்டத்தில் எதிர் வருகிற 26-ந் தேதி நடைபெற இருக்கும் கிராமசபை கூட்டத்திற்காவது சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் வர வேண்டும். அவ்வாறு வரவில்லையெனில் மீண்டும் கிராமசபை கூட்டத்தை புறக்கணிப்பது, தற்போது நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்திற்கு அனுமதி வழங்காமல் மெத்தனப்போக்கில் செயல்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஊரில் உள்ள பல சாக்கடைகளை தூர்வாரி சுகாதாரத்தை மேம்படுத்தி தரவேண்டும். ரேஷன் கடைகளில் அந்தந்த குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும் என்ற அறிவிப்பால் வெளியூரில் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களால் பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். தண்டனை காலம் முடிந்தும் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பொதுநல இளைஞர் பேரவை ஒருங்கிணைப்பாளர் சாகுல்ஹமீது தலைமையில், பொதுமக்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments