கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் சார்பில் மீமிசல் காவல் நிலையத்தில் போலி மந்திரவாதி செய்யது அப்துல் ராபி மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு அளிப்பு
















கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் சார்பில் மீமிசல் காவல் நிலையத்தில் போலி மந்திரவாதி செய்யது அப்துல் ராபி மீது நடவடிக்கை எடுக்ககோரி மனு  கொடுக்கப்பட்டது.

இது குறித்து கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில்

பெறுநர் 
உயர்திரு உதவி காவல் ஆய்வாளர் மீமிசல் காவல் நிலையம் 
மீமிசல்

பொருள் : போலி மந்திரவாதி செய்யது அப்துல் ராபி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி

மதிப்பிற்குரிய ஐயா,

இதுவரையில் தங்கள் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் மாந்திரீகம் என்ற பெயரால் மூடநம்பிக்கையில் மக்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் என்ற கிராமத்தில் கேரள மந்திரவாதி கூறிய அடிப்படையில் ஒன்றுமறியாத பச்சிளம் குழந்தை ஒன்று நரபலி கொடுக்கப்பட்டது தாங்கள் அறிந்த செய்தியே

அதேபோல் மற்றொரு கேரள மந்திரவாதியும் மீமிசல் பகுதியில் ஏம்பகோட்டை மத்திய கூட்டுறவு வங்கியின் எதிர்ப்புறம் உள்ள ஒரு வீட்டில் இருந்து கொண்டு மக்களை கவரும் வண்ணம் துண்டு பிரசுரம் அடித்து மக்களை அழைத்து மாந்திரீகம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். எனவே இதுபோன்ற சமூக தீமைகளை ஒழிக்க வேண்டியும் மேலும் ஒரு மல்லிப்பட்டினம் சம்பவம் நடைபெறாமல் இருக்க வேண்டியும் இந்த மந்திரவாதி மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களையும் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்








காவல்துறை  நடவடிக்கை எடுத்தையடுத்து அடுத்து என்றும் உதவும் கரங்கள் வெளியிட்ட செய்தியில்

அன்பார்ந்த சகோதரர்களே சமீபத்தில் கேரளாவை சேர்ந்தவர் முஸ்லிம் மாந்திரீகவாதி என்கிற போர்வையில் மக்களின் துனபத்தையும் பிணிகளையும் போக்குவேன் என்று கூறி தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் அப்பாவி குழந்தையை தண்ணீரில் அமிழ்த்தி நரபலி கொடுத்த நிகழ்வை அனைவரும் அறிந்திருப்பீர்கள் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.அதே பாணியில் இரண்டு நாளைக்கு முன்பு நமது மீமிசலில் ஏம்பக்கோட்டை அருகில் கேரளா மாந்திரீகவாதி ஒருவர் மக்களின் துன்பங்களை கலைவதாகவும் சூனியம் போன்றவற்றிற்கான தீர்வினை தருவதாகவும் துண்டுபிரசுரம் மூலம் விளம்பரம் செய்தார். 

இந்த தகவல் நம்முடைய என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளைக்கு தெரியவந்தது.அதன் அடிப்படையில் இது மாதிரியான போலி மாந்திரீகவாதிகளால் ஏற்படும்  சமூகதீமைகளையும் மூட நம்பிக்கையின் பெயரால் மக்களை காவு வாங்கும் இவர்களை நம்முடைய பகுதிகளிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் மீமிசல் காவல்நிலையத்தில் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளையின் சார்பாக சகோ.யாசின் அவர்களும் சகோ.முஸ்தாக் அவர்களும் புகார் மனு அளித்தனர்.

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் இந்த தகவல் தெரியப்படுத்தப்பட்டது.அதனடிப்படையில் அந்த போலி மந்திரவாதியை அழைத்து எச்சரித்த காவல்துறை உடனே வீட்டை காலி செய்து சொந்த ஊருக்கு திரும்பும்படி எச்சரித்தது.மீறினால் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்துள்ளது.எங்களின் வேண்டுகோளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் முஸ்லிம் என்கிற போர்வையில் இதுபோன்ற மூட நம்பிக்கையின் பெயரால் மக்களை ஏமாற்றும் நபர்கள் மீமிசல் பகுதியில் இருந்தால் அவர்களை அடையாளம் கண்டு காவல்துறையிடம் ஒப்படைப்போம் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி!

இப்படிக்கு

என்றும் உதவும் கரங்கள் 
கோபாலப்பட்டிணம் மீமிசல்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments