கோபாலப்பட்டிணத்தில் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்!(படங்கள்)


நாட்டின் 73வது குடியரசு தினத்தை  முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை சார்பாக  இன்று(24/1/2022) திங்கள்கிழமை மாபெரும் இரத்ததான முகாம் கோபாலப்பட்டினத்தில்   நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை  இணைந்து நடத்திய இந்த இரத்ததான முகாமில் 23 யூனிட் இரத்தம், அறந்தாங்கி மருத்துவமனை இரத்தவங்கிக்கு  வழங்கப்பட்டது.

இந்த இரத்ததான முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர் அப்துல் ரசாக் தலைமை வகித்தார் இதில் கிளை தலைவர் செய்யது இபுராஹிம் மற்றும் கிளை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த இரத்ததான முகாமில் கிளை செயலாளர் முகமது அபுதாஹிர் கிளை பொருளாளர் மகாதீர் முகமது துணை தலைவர் முஹம்மது முனாஸ் துணை செயலாளர் முகமது ஹுசைன் மருத்துவணி ஹிதாயத்துல்லா மாணவரணி ரியாஸ் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்...

அதிகமான பொதுமக்கள் இரத்ததானம் முகாமில் கலந்து கொண்டனர்...

என்றும் சமுதாயப்பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments