ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு எதிரொலி கோபாலப்பட்டிணம் , மீமிசலில் வெறிச்சோடிய சாலைகள்


ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு  எதிரொலியால் கோபாலப்பட்டிணம் , மீமிசலில்  சாலைகள்‌ வெறிச்சோடி காணப்பட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தியது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.இதனால் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடைகள், ஓட்டல்கள், சினிமா திரையங்கு 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனை கட்டுப்படுத்தும்  விதமாக கடந்த ஜனவரி 06ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும்  அதே நேரத்தில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா அருகே உள்ள கடற்கரை நகரமான  கோபாலப்பட்டிணம் , மீமிசலில் இன்று 09.01.2022 ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக  கோபாலப்பட்டிணம்  முக்கிய சாலைகள், மீமிசல் முக்கிய சாலைகள் மற்றும் கடைவீதியில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு அறிவித்து இருந்த அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்து இருந்தது.

காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி, வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சுற்றி வருவோரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்புகின்றனர்.

ஊரடங்கு உத்தரவை மதித்து பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே தங்கி இருந்தனர்.

கோபாலப்பட்டிணம் புகைப்படம்


மீமிசல் புகைப்படம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments