தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு - அமைச்சர் பொன்முடி அறிவிப்புதமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா காரணமாக அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் காலவரம்பின்றி ஒத்தி வைக்கப்படுவதாகவும்,கொரோனா தாக்கம் குறைந்த பிறகு பின்னர் தேர்வுகள் நடைபெறும் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

மேலும்,எழுத்துத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டாலும்,செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.எனவே,விடுமுறையைப் பயன்படுத்தி பாடங்களை படித்து மாணவர்கள் தேர்வுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக,தேர்வுக்காக மாணவர்களுக்கு விடுமுறை ‘study holiday’ விடப்பட்ட நிலையில்,இந்த விடுமுறை நாட்களில் கல்லூரிகள்,வகுப்புகள் நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்துள்ளார். மேலும்,கல்லூரிகள் திறப்பு குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments