தேசிய கொடியேற்றி விடுதலை போராட்ட தியாகிகள் அலங்கார வாகன பேரணி:பாசிச எதிர்ப்பு உறுதிமொழி



 


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேசிய கொடியேற்றி விடுதலை போராட்ட தியாகிகள் அலங்கார வாகன பேரணி நடத்தி பாசிச எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு செய்தனர்.

இன்று டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஒன்றிய அரசின் பாசிச நடவடிக்கையால் தமிழக மண்ணின் விடுதலை போராட்ட தியாகிகளின் அலங்கார வாகனத்தை அங்கிகரிக்காத போக்கை கண்டித்து அலங்கார வாகன பேரணி நடத்தினர். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமையில் ஒன்றிய செயலாளர் தென்றல் கருப்பையா, மாவட்ட குழு உறுப்பினர் தங்கராசு ஆகியோர் முன்னிலையில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தேசிய கொடியை ஏற்றினார்.

முன்னதாக அறந்தாங்கி செக்போஸ்ட் முதல் பேருந்து நிலையம் வரை வேலுநாச்சியார்,வ.உசிதம்பரனார்,பாரதியார்,குயிலி போன்ற தமிழக மண்ணின் விடுதலை போராட்ட தியாகிகளை போல  அலங்காரம் இட்டுக்கொண்ட சிறுவர்,சிறுமியர்கள் நின்றுக்கொண்டு வந்த வாகன பேரணியை கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை துவங்கிவைத்தார்.  

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் கலைமுரசு,  மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, ஜனநாயக விவசாயிகள் மாநில துணை செயலாளர் சேக் இஸ்மாயில், திமுக அறந்தாங்கி நகர அவை தலைவர் தியாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைசெயலாளர் ராஜேந்திரன், 
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட தலைவர் தோழர் கருணா,  வழக்கறிஞர் மாவட்ட செயாலளர் தோழர் அலாவுதீன், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் ராஜேந்திரன், விசிக ஒன்றிய செயலாளர் நாகமுத்து உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பேரணியில் பங்கெடுத்து பாசிசத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments