கோபாலப்பட்டிணத்தில் கண்ணுக்கு விருந்தளிக்கும் பச்சை பசேல் காட்சியளிக்கும் பசுமையான மரங்கள்
கோபாலப்பட்டிணத்தில் கண்ணுக்கு விருந்தளிக்கும் பச்சை பசேல் காட்சியளிக்கும் பசுமையான மரங்கள்

மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் கிராமத்தில் கண்ணுக்கு விருந்தளிக்கும் மரங்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணம் கிராமத்தில் நிறைய மரங்கள் பச்சை பசேல் என பார்ப்பவர்கள் கண்களுக்கு குளிர்ச்சி ஊட்டும் வகையில் வளர்ந்து நிற்கிறது. கடற்கரை கிரமமான கோபாலப்பட்டிணத்தில் 
மரங்கள் அழகாக பச்சை பசேல் என மாடியிலிருந்து பார்ப்பவர்கள் கண்களுக்கு குளிர்ச்சி ஊட்டும் வகையில் வளர்ந்து நிற்பதை அப்பகுதியில் செல்லக் கூடியவர்களை ஈர்க்கும் மரங்கள் உள்ளன.

இப்பொழுது பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக மலை பிரதேஷம் போன்று காட்சியளிக்கிறது.

பொதுமக்கள் புகைப்படம் எடுத்தும், ரசித்தும் பெருமகிழ்ச்சி அடைந்து வாட்ஸ்ஆப் ஸ்ட்டேஸ் மற்றும் சமூக வளைத்தளங்களில்  பதிவிட்டு வருகின்றனர்

மரம் வளர்ப்போம் , மழை பெறுவோம்

இது போன்று நமதூர் பற்றிய இயற்கையான புகைப்படங்களை எடுத்தால் எங்களுக்கு   அனுப்புங்கள். அதை தாராளமாக GPM மீடியாவில் பதிவிடுகிறோம்

மரம் வளர்ப்பு பற்றி  நபி மொழி
 
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) 

 ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
 
 புஹாரி : 2320, அனஸ் இப்னு மாலிக் (ரலி)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments