புறநகர் ரயிலில் பயணிக்க தடுப்பூசி சான்று தேவையில்லை - தெற்கு ரயிவ்வே 


புறநகர் ரெயிலில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இனி தேவையில்லை என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை புறநகர் ரெயிலில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், புறநகர் ரெயிலில் பயணிக்க இனி தடுப்பூசி சான்று தேவையில்லை என்று தெற்கு ரெயில்வே இன்று அறிவித்துள்ளது. 

சீசன் டிக்கெட் வாங்கவும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதலை இனி காண்பிக்க வேண்டியதில்லை என தெரிவிக்கபப்ட்டுள்ளது.  இந்த அறிவிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

ரெயிலில் வழக்கம் போல மாஸ்க் அணிந்து தனிமனித இடைவேளியை பின்பற்ற வேண்டும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments