தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு... பஸ் போக்குவரத்து இருக்குமா..?






இரவு ஊரடங்கின்போது பொது மற்றும் தனியார் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின்போது பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவை இயங்காது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் இரவு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் வார நாட்களில்  இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு ஊரடங்கின்போது எவற்றுக்கு அனுமதி என்பது குறித்தும் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் தமிழகத்தில் அதிகரித்துவரும் சூழலில் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, நாளை முதல் வார நாட்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல்  காலை 5 மணிவரை ஊரடங்கு (night curfew) அமலில் இருக்கும். இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.

எனினும், இந்த இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது  மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள்,  மாநிலங்களுக்கிடையேயான பொது / தனியார் பேருந்து சேவைகள் (பயணத்தின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலைத் தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய போக்குவரத்து நிறுவன நிருவாகம் உறுதி செய்ய வேண்டும்) ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ATM மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (petrol, diesel & LPG) இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும்

இரவு ஊரடங்கின்போது பொது மற்றும் தனியார் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின்போது பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவை இயங்காது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments