கோபாலப்பட்டிணத்தில் "சந்தேகத்திற்குரிய வகையில் நபர்கள் யாரும் சுற்றி திரிந்தாலோ அல்லது பிச்சை கேட்டு வந்தாலோ " உடனடியாக ஜமாத்தார்களிடம் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல்!!




கோபாலப்பட்டிணத்தில் "சந்தேகத்திற்குரிய வகையில் நபர்கள் யாரும் சுற்றி திரிந்தாலோ அல்லது பிச்சை கேட்டு கொண்டு வந்தாலோ " உடனடியாக ஜமாத்தார்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

கோபாலப்பட்டிணத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் வீடுகளில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த நபரை மீமிசல் காவல்துறையினரிடம்  கோபாலப்பட்டிணம் இளைஞர்கள்‌ ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் 28.01.2022 வெள்ளிக்கிழமை பழைய காலனியில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவன் கையில் ஒரு பேப்பர் வைத்துக்கொண்டு வீடு வீடாக பேப்பரை கொடுத்து வசூல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தான். 

இந்நிலையில் அவன் மேல் அந்த பகுதில் உள்ள இளைஞருக்கு சந்தேகம் வர உடனே அவனை பிடித்து விசாரித்தார். அப்பொழுது அவன் வைத்திருந்த பேப்பரை வாங்கி படித்து பார்த்ததில் அரை நாக்கு இல்லாத ஊமை, வாய்பேசவும், காதும் கேளாதவர் எனவும் தாய், தந்தை இல்லை, மேலும் உடன்பிறந்தவர்கள் ஐந்து பேர் எனவே கஷ்டநிலையில் உள்ளதால் உதவ வேண்டும் என எழுதப்பட்டிருந்தது.

மேலும் பெயரை கேட்டால் ஊமை போன்று சைகையால் கூறினான்,மேலும் சந்தேகம் அதிகரிக்க இளைஞர்கள் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் நான் ஊமை இல்லை என உண்மையை ஒப்புக்கொண்டான். இதனையடுத்து உடனே அங்கிருந்த இளைஞர்கள் 
மீமிசல் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இளைஞர்கள் கூறுகையில்,

உங்கள் வீட்டு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் யாரேனும் யாசகம் (தர்மம்) கேட்டு வந்தாலோ அல்லது சுற்றி திரிந்தாலோ உடனடியாக ஜமாஅத் நிர்வாகிகளுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவியுங்கள்.

மேலும் பல ஊர்களில் திருட்டு மற்றும் குழந்தை கடத்தல்  போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே பொதுமக்கள் எச்சரிக்கை இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று இளைஞர்கள் கூறினார்கள்.

பொதுமக்களுக்கு 28.01.2022 வெள்ளிக்கிழமை அன்று அஸர் தொழுகைக்கு பிறகு ஊர் மைக்கில்  
சந்தேகத்திற்குரிய வகையில் யாரேனும் பிச்சை கேட்டு வந்தாலோ அல்லது சுற்றி திரிந்தாலோ உடனடியாக ‌ஜமாத் நிர்வாகிகளிடம் தகவலை அளியுங்கள் என கூறப்பட்டது.

நிர்வாகிகள் தொடர்பு எண்கள்
தலைவர்:  1.ASM. செய்து முஹம்மது   -  94426 45371

                         2.OSM. முஹம்மது அலி ஜின்னா - 98424 95656

துணைத்தலைவர்:  MKR.முஹம்மது மீராசா - 80956 59390

செயலாளர்:  M.ராஜா முஹம்மது - 97874 50007

இணை செயலாளர்:  M.கலந்தர் நெய்னா முகமது -75022 44444

துணை செயலாளர்:  VE.சாகுல் ஹமீது  -.98656 48673

பொருளாளர்:  KM.முகமது உசேன் - 97881 80405

கணக்காளர்: (கணக்கு பிள்ளை) மு.மு.சர்புதீன் -98425 43921


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments