கோபாலப்பட்டிணத்தில் சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டி நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவியிடம் கோரிக்கை மனு அளித்த பொதுமக்கள்!!
கோபாலப்பட்டிணத்தில் சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து தரக்கோரி நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி R.சீத்தாலட்சுமி MSC.,B.Ed., அவர்களிடம் பொதுமக்கள் சார்பில் நேற்று 1.2.2022 கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த கோபாலப்பட்டிணம் பெரியபள்ளிவசல் சாலை பீச் 2 வது தெருவில் (ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பின்புறம் முதல் கடற்கரை வரை உள்ள பகுதியில்) சாலை வசதி  மற்றும் தண்ணீர் வசதி இல்லாமல் பொது மக்கள் மிகவும்  சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார்.  இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோபாலப்பட்டிணம் பொது மக்கள் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி R.சீத்தாலட்சுமி MSC.,B.Ed., அவர்களிடம்  மனு அளித்தனர்.
மனுவில் கூறப்பட்டுள்ள கோரிக்கைள் பின்வருமாறு:

1.கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளவாசல் சாலை பீச் 2-வது தெருவில் சாலை வசதி செய்து தர கோரி 

2. கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளவாசல் சாலை பீச் 2-வது தெருவில் தெரு தண்ணீர் பைப் வீட்டிற்கு வீடு தரக்கோரி 

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற செயலாளர் ஸ்டெல்லா அவர்கள் உடனிருந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments