கோட்டைப்பட்டினம் அருகே புதுக்குடியில் மீனவர் வலையில் சிக்கிய பச்சை ஆமை  கோட்டைப்பட்டினம் அருகே புதுக்குடியில் மீனவர் வலையில் சிக்கிய பச்சை ஆமை யை வனத்துறையினர் மீட்டு கடலுக்குள் விட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த தெற்கு புதுக்குடியை சேர்ந்தவர் மாதவன். நாட்டுப்படகு மீனவரான இவர் நேற்று கடலில் மீன் பிடித்துக் கொண்டு கரை திரும்பினார். கரை திரும்பி வலையில் சிக்கியிருந்த மீனை பிரித்தெடுக்கும் போது வலையில் அரியவகை பச்சை ஆமை ஒன்று சிக்கியிருந்தது. அதைப் பார்த்த மீனவர் மாதவன் உடனே வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

 இதன்பேரில் அறந்தாங்கி வனச்சரக அலுவலர் சதாசிவம் தலைமையில் மணமேல்குடி மீனவர்கள் ராஜேந்திரன், அந்தோணிசாமி, அன்புமணி உள்ளிட்டோர் சென்று பச்சை ஆமையை மீட்டு மீண்டும் கடலுக்குள் விட்டனர். புதுக்கோட்டை மாவட்ட கடல் பகுதியில் அரியவகை பச்சை ஆமை மீனவர்கள் வலையில் சிக்கியது இதுவே முதல் முறையாகும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments