கோட்டைப்பட்டிணம் கடைவீதியில் அதி நவீன சிசிடிவி கேமிரா பொருத்த வேண்டும்...!
காவல் நிலையத்தில் நடந்த வர்த்தகர்கள் கூட்டத்தில் Dsp வேண்டுகோள்..!

கோட்டைப்பட்டிணம் கடைவீதியில் அதி நவீன சிசிடிவி கேமிரா பொருத்த வர்த்தகர்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ஏ.மனோகரன் (டிஎஸ்பி ) அறிவுறுத்தினார். 

கோட்டைப்பட்டிணம் காவல் நிலையத்தில் வர்த்தகர்களுக்கான கூட்டம் டிஎஸ்பி திரு.ஏ.மனோகரன் தலைமையில் நடந்தது.

 இன்ஸ்பெக்டர் திரு. எஸ்.ரவிச்சந்திரன் முன்னிலை நடைபெற்ற கூட்டத்தில் டிஎஸ்பி மனோகரன் பேசியதாவது:

குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் அனைத்து வர்த்தக நிறுவனங்கள்,  முக்கிய சாலை, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும். இதற்கு வர்த்தக சங்கமும், வர்த்தகர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.  

இக்கூட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் எம்.அப்துல் ஹமீது, கவுரவ தலைவர் கான் மாமா, செயலாளர் MKA. ஜமால், பொருளாளர் KM.கலீல் ரஹ்மான், துணை தலைவர் PMS. சலீம், துணை செயலாளர் ARNS. முகம்மது இலியாஸ் சமூக ஆர்வலர்கள் முகம்மது லாபிர் மற்றும் வர்த்தகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அழைப்பின் பேரில் கண்காணிப்பு கேமிரா பொருத்தும் நிறுவனங்கள் நூன் டெக் (NOON TECH CCTV) சார்பில் ஏ.எம்.ஹாரிஸ், ஜியா எலக்ட்ரானிக்ஸ் சார்பில் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு பாதுகாப்பு கருவிகள் அவசியம் பற்றி விளக்கினர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments