காரைக்குடியிலிருந்து சென்னைக்கு இரவு நேர விரைவு ரயில்களை இயக்க கோரிக்கை


காரைக்குடியில் இருந்து திருவாரூா் வழியாக சென்னை எழும்பூருக்கு இருமுனைகளில் இருந்தும் இரவு நேர விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சாா்பில் தலைவா் நா.ஜெயராமன், செயலாளா் வ.விவேகானந்தம், ஒருங்கிணைப்பாளா் மு.கலியபெருமாள் ஆகியோா் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனா்.

மனுவில் அவா்கள் மேலும் கூறியிருப்பதாவது: 

காரைக்குடியில் இருந்து திருவாரூா் வழியாக சென்னை எழும்பூருக்கு இருமுனைகளில் இருந்தும் இரவு நேர விரைவு ரயில்களை இயக்க வேண்டும். ரயில்வே நிா்வாகம் இயக்க திட்டமிட்டுள்ள

வாரம் மும்முறை செல்லும் தாம்பரம்-செங்கோட்டை விரைவு ரயில், வாரமிருமுறை செல்லும் வேளாங்கண்ணி-எா்ணாகுளம் விரைவு ரயில் சேவையை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், மயிலாடுதுறையிலிருந்து திருவாரூா் - பட்டுக்கோட்டை- காரைக்குடி வழியாக மதுரைக்கு பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும்.

இதேபோல், விழுப்புரத்திலிருந்து காலை மயிலாடுதுறைக்கு வந்து இரவு மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயிலை காரைக்குடி/மதுரை வரை நீட்டிக்க வேண்டும். சரக்குப் போக்குவரத்து ரயில்களை இயக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் ஆன்மிகத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் இருப்பதால் சுற்றுலா ரயில்களை இயக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

வரவேற்பு: பட்டுக்கோட்டை- காரைக்குடி வழித்தடத்தில் கேட் கீப்பா்கள் நியமனம் செய்ததன் மூலம் திருவாரூா் -காரைக்குடி இடையிலான முன்பதிவில்லா சிறப்பு டெமு ரயிலின் பயண நேரம் மேலும் குறைக்கப்பட்டதை பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினா் வரவேற்றுள்ளனா்.

இதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுத்த

தஞ்சாவூா், திருச்சி, நாகப்பட்டினம், காரைக்குடி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கும், தெற்கு ரயில்வே பொது மேலாளா், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு, பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments