அதிக விலைக்கு ஒப்பந்தம் கோருவதால் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் தாமதம்: பள்ளிக்கல்வித் துறை விளக்கம்




அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011-ல் தொடங்கப்பட்டது. அதன்படி 2019 வரை 44 லட்சம் மாணவர்களுக்கு இலவசமடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை.


இதற்கிடையே, கரோனா பரவல்சூழலில் மாணவர்கள் வீடுகளில் இருந்து கல்வி பயில்வதற்கு மடிக்கணினி பெரிதும் உதவும். எனவே, இலவச மடிக்கணினிகளை விரைவாக வழங்க வேண்டும் என்று அரசுப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

அரசின் இலவச மடிக்கணினிகள் குறைந்த விலையில் தயாரித்து வழங்கப்படுபவை. ஆனால், கரோனா பரவலால் உலக அளவில்மடிக்கணினிகளின் சந்தை மதிப்புஉயர்ந்துள்ளது. இதனால் கணினிதயாரிப்பு நிறுவனங்கள், அதிகவிலைக்கு ஒப்பந்தம் கோருவதால் கொள்முதல் செய்வதில் சிக்கல் நிலவுகிறது.

மாணவர்களின் நலன் கருதிஇந்த விவகாரத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments