கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த நைனா முகம்மது அவர்களுக்கு மருத்துவ நிதி தேவை பூர்த்தி ஆகி விட்டது!

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் கடற்கரை பகுதியில் வசித்து வரும் மருத்துவ ஆலோசகராக இருந்து வரும் நெய்னா முகம்மது அவர்களுக்கு ரூ.80,000 முதல் ரூ.100,000 மருத்துவ சிகிச்சைக்கு  பொருளாதார உதவி வேண்டி  GPM மீடியாவில் கடந்த 03-02-2022 அன்று பதிவிட்டிருந்தோம். அதனடிப்படையில் அவர்களுடைய சிகிச்சைக்கு தேவையான பணம் ரூ.91,400 கிடைத்துவிட்டது.பணம் அனுப்பி உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்‌, செய்தியை மக்களிடம் கொண்டு சென்ற வாசகர்களுக்கு இறைவன் இம்மையிலும் , மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக!

பொருளாதார உதவி செய்த அனைவருக்கும் குடும்பத்தினர் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

பொருளாதார உதவி செய்தவர்களுக்கும் மற்றும் தகவலை பகிர்ந்த அனைவருக்கும் GPM மீடியா சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

 மேலும் கடந்த 04-02-2022 வெள்ளிக்கிழமைக்குள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்த காரணத்தால் நாளை 07-02-2022 பிற்பகல் 12 மணியளவில் மதுரை ராகவேந்திரா மருத்துவமனையில் ஸ்டண்ட் அமைப்பதற்க்கான சிகிச்சை
செய்யப்பட உள்ளது.

மருத்துவ சிகிச்சை பெற்று பூரண நலத்துடன் வீடு திரும்ப அனைவரும் பிராத்திப்போம்!!

GPM மீடியா சார்பாக கடந்த 2020 கொரனோ முதல் அலையின் போது சுமார் 2.7 லட்சம்  வரை ஊர் மக்கள் மற்றும் வாசகர்களிடம் வசூல் செய்து ஏழை எளிய மக்களுக்கு 4 கட்டமாக மளிகை பொருட்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து GPM மீடியா மீது நம்பிக்கை வைத்து உதவி செய்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.  உங்களுக்கு செல்வத்தை‌ இறைவன் அதிகமாக வழங்க தூஆ செய்கின்றோம்.

 பொறுப்புடன். ..                                      
GPM மீடியா டீம்
கோபாலப்பட்டிணம்.
மீமிசல்
புதுக்கோட்டை மாவட்டம்
06-02-2022
ஞாயிற்றுக்கிழமை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments