அலாரம்- 7:50 AM; ப்ரஷ்- 8:20 AM; அழாமல் இருந்தால் 100 ரூபாய்; குழந்தையுடன் தந்தை போட்ட ஒப்பந்தம்




தந்தை தன் ஆறு வயது மகனுக்கு தினமும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என ஒப்பந்தம் போட்டிருப்பது வைரலாகி வருகிறது.

பொதுவாக நாம் சில நாட்களில் நாள்முழுவதும் என்ன வேலை செய்யவேண்டும் எப்போது செய்யவேண்டும் என்று எழுதி வைத்து வேலை செய்வதுண்டு. அதிலும் ஒரு சிலர் தான் அன்றாட வேலைகளை இவ்வாறு அட்டவணைப்படுத்தி அதைப் பின்பற்றுவார்கள். பலர் இவ்வாறு அட்டவணைப்படுத்துவார்கள் ஆனால் என்றும் அதைப் பின்பற்ற மாட்டார்கள். இதுபோன்றெல்லாம் குழந்தைகள் நினைப்பதே இல்லை. அவர்கள் உலகம் தனியானது. அட்டவணைப்படுத்தப்பட்ட வாழ்வு அவர்களிடம் இல்லை. ஆனால் இங்கு ஒரு தந்தை தன் ஆறு வயது மகனுக்குத் தினமும் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது எப்போது எழ வேண்டும் எப்போதும் தூங்கவேண்டும் என்பது வரை வேடிக்கையாக ஒரு பெரிய பட்டியலைத் தயார்செய்து கொடுத்துள்ளார்.

அபீர் என்ற ஆறு வயது சிறுவனின் தந்தை தன் மகனுக்குத் தான் ஒரு நாளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பெரிய ஒப்பந்தம் எழுதி அதில் அந்தச் சிறுவனிடம் கையொப்பம் ஒன்றை வாங்கியுள்ளார்.

அந்த ஒப்பந்தத்தின்படி அபீர் தினமும் காலையில் 7.50 க்கு அலாரம் வைத்து 8 மணிக்குள் எழுந்து விட வேண்டும். குறிப்பாக அதுவும் 10 நிமிடத்திற்குள் எழுந்துவிட வேண்டும். காலை 8.50 மணிக்கு 30 நிமிடத்திற்குள் காலை உணவைச் சாப்பிட்டு முடிக்க வேண்டும். இவ்வாறாக அந்த ஆறு வயது குழந்தை என்ன செய்ய வேண்டும், எப்போது டிவி பார்க்க வேண்டும், எப்போது விளையாட வேண்டும் எவ்வளவு நேரம் விளையாட வேண்டும் என்ற ஒரு பெரிய பட்டியலையே தன் மகனுக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் நாள் முழுவதும் அழாமல் கத்தாமல் மற்றும் சண்டை போடாமல் இருந்தால் நாள் ஒன்றுக்கு 10 ரூபாயும் இதை ஏழு நாள் விடாமல் தொடர்ந்தால் 100 ரூபாயும் என வேடிக்கையான ஒப்பந்தம் ஒன்றைச் செய்து அதில் கையொப்பமும் வாங்கியுள்ளார் அந்த தந்தை.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட இந்தப் பதிவு மிகவும் வேடிக்கையாக உள்ளது என்று பலர் இதனைப் பகிர்ந்து வருகின்றனர். ஒருசிலர் இந்தச் சிறுவயதிலேயே இந்தச் சிறுவனுக்கு இந்த நிலைமையா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மற்றொரு புறம் இதுமாதிரில்லம் செய்தால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடுவார்கள் என்று தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments