ஆலங்குடியில் நடைபெற்ற காவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் - புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பங்கேற்பு  
உள்ளாட்சி தேர்தல் விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 
ஆலங்குடி  உட்கோட்ட காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு குறித்தும், தேர்தல் நடத்தைவிதி முறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கியும், வாக்குசாவடிகளின் நிலை குறித்து அறிவுரைகளை   மாவட்ட எஸ்.பி.நிஷாபார்த்திபன் வழங்கினார்.

கூட்டத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் வடிவேல் முன்னிலைவகித்தார்.கூட்டத்தில் ஆலங்குடி சரக காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து இன்ஸ்பெக்டர்கள், சப்& இன்ஸ்பெக்டர்கள் மற்றும்  ஆலங்குடி, வடகாடு, கீரமங் கலம், கறம்பக்குடி, ரெகுநாதபுரம், மழையூர், செம்பட்டி விடுதி காவல் நிலையங்களில் உள்ள போலீசார் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments