கொலை வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாரட்டு

புதுக்கோட்டையில் பழைய அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அலுவலர்களின் கூட்டுறவு சிக்கன நாணய சங்க அலுவலக கட்டிடத்தில் தங்கி கொண்டு அங்குள்ள பணிகளை செய்து வந்த நாகரெத்தினம் என்பவர் கடந்த மாதம் 19&ந் தேதியன்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

 
இச்சம்பவம் குறித்து நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொலை வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ், நகர காவல் ஆய்வாளர் குருநாதன் மற்றும் காவல் ஆளிநர்கள், சிறப்பு தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்து ஆகியோர்களை மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஏ.பாலகிருஷ்ணன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் நேரடியாக அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments