கோபாலப்பட்டிணம் காட்டுக்குளத்தில் குவியும் நீர் காகங்கள்




இனப்பெருக்க காலத்தையொட்டி இறை தேடி கோபாலப்பட்டிணம் காட்டுக்குளத்தில் நீர் காகங்கள் குவிந்து வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள  கோபாலப்பட்டிணம்  நுழைவாயில் பகுதியில் உள்ளது காட்டுக்குளம். இந்த குளத்தின் அருகே காட்டுக்குளம் பள்ளிவாசல் மற்றும் குடியிருப்புகள் உள்ளது.

கடந்த ஆண்டு 2021 பெய்த கனமழையில் குளம் முழுவதும் நிரம்பியது. பெரும்பாலும் இனப்பெருக்க காலத்தில் இறை தேடி கோபாலப்பட்டிணம் காட்டுக்களத்திற்கு  பறவைகள் வருகின்றன. 
இங்கு வரும் பறவைகள் குளத்தில் உள்ள மீன்கள் மற்றும் புழுக்களை உணவாக உட்கொள்கின்றன.மீண்டும் மாலை நேரத்தில் தங்கள் வந்த இடத்திற்கு சிறகடித்து பறக்கின்றன.காட்டுக்குளத்தில் மீன்கள் அதிகளவில் இருப்பதால் அங்கு பறவைகள் கூட்டம், கூட்டமாக முகாமிட்டுள்ளன.









இதையொட்டி கோபாலப்பட்டிணம் காட்டுக்குளத்தில் நாட்டுப்பறவை இனங்களான நாரை, கொக்கு, நீர் காகம் போன்ற பறவைகள் குவிய தொடங்கி உள்ளதை காண முடிகிறது. 

பறவைகள் ஒவ்வொன்றும் நீண்ட கால், நீண்ட கழுத்துகளுடன் தண்ணீரில் நின்று மீன்களை வாயால் கவ்வியபடி இரை தேடுவதை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த ஆச்சரியத்தோடு பார்த்து ரசித்தனர். 

பறவைகள் கொத்தியபடி சண்டையிட்டும் விளையாடுகின்றன. நீர்நிலைகளில் உள்ள மீன்களை வாயால் கவ்வி பிடித்தபடி பறந்து செல்வதும் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்து வருகின்றது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments