கோபாலப்பட்டிணம் காட்டுக்குளத்தில் மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி!
கோபாலப்பட்டிணம் காட்டுக்குளத்தில்  மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள 
கோபாலப்பட்டிணம் 
நுழைவாயில் பகுதியில் உள்ளது காட்டுக்குளம். இந்த குளத்தின் அருகே காட்டுக்குளம் பள்ளிவாசல் மற்றும் குடியிருப்புகள் உள்ளது.

கடந்த ஆண்டு 2021 பெய்த கனமழையில் குளம் முழுவதும் நிரம்பியது. இந்த குளத்தில் ஏராளமான மீன்களும் காணப்பட்டன.  கடந்த சில நாட்களாக இந்த குளத்தில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் சேர்ந்து மாசடைந்து காணப்பட்டது.


இந்த நிலையில்
கடந்த சில தினங்களாக மீன்கள் அதிக அளவு செத்து குளத்தில் மிதக்கிறது.
இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அந்த குளத்திற்கு அருகே பள்ளிவாசல் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. 
மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதால் சாலையில் செல்பவர்கள் மற்றும் அருகில் இருக்கும் குடியிருப்புவாசிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
எனவே இறந்த மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

எனவே உடனடியாக குளத்தில் இறந்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்தி குளத்தை சுத்தம் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments