கால்நடை மருத்துவ முகாமில் காலாவதியான மருந்து பவுடர் வினியோகம் கறம்பக்குடி அருகே பரபரப்பு
கறம்பக்குடி அருகே உள்ள கருப்பட்டி பட்டியில் கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இதில் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு மாடுகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். அப்போது கால்நடைகளுக்கு தாது சத்தை அதிகரிக்க செய்யும் மருந்து பவுடர் பாக்கெட் வழங்கப்பட்டது. இதனை ஏராளமானோர் வாங்கி சென்றனர். இந்தநிலையில், அந்த மருந்து டிசம்பர் 2019-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு நவம்பர் 2021-ல் காலாவதி ஆவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்ட பாக்கெட்டுகளிலும், மருத்துவர்கள் வைத்திருந்த பாக்கெட்டுகளிலும் அதே தேதியே குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த மருத்துவ குழுவினர் அந்த பாக்கெட் வழங்குவதை நிறுத்தி வைத்தனர்.

இதுகுறித்து கறவை மாடு வளர்க்கும் பெண்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கோமாரி நோய் தாக்கி பல கால்நடைகள் இறந்துவிட்டன. கால்நடை மருத்துவமனைகளிலும் போதுமான மருந்து, மாத்திரைகள் இருப்பதில்லை. தொடர் கோரிக்கைக்கு பிறகு தான் இதுபோன்ற மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதிலும் காலாவதி மருந்துகளை வினியோகம் செய்யாமல் கவனமாக இருந்து எங்கள் கால்நடைகளை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments